Breaking News
Home / இந்தியா / விருதுநகரில் எஸ். ஐ. ஆர் .ஐ திருத்தத்தில் உள்ள குளறுபடிகளை கண்டித்தும் எஸ் ஐ ஆர் திருத்த பணிகளில் திமுக கட்சியினர் தலையிட இருப்பதை அரசு சரிசெய்ய வேண்டும் என வலியுறுத்தி த.வெ.க சார்பில் ஆர்ப்பாட்டம் – 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு….

விருதுநகரில் எஸ். ஐ. ஆர் .ஐ திருத்தத்தில் உள்ள குளறுபடிகளை கண்டித்தும் எஸ் ஐ ஆர் திருத்த பணிகளில் திமுக கட்சியினர் தலையிட இருப்பதை அரசு சரிசெய்ய வேண்டும் என வலியுறுத்தி த.வெ.க சார்பில் ஆர்ப்பாட்டம் – 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு….

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தலைவர் தளபதி விஜய் ஆணைக்கினங்க தமிழக முழுவதும் தேர்தல் ஆணையம் கொண்டுவந்துள்ள எஸ். ஐ. ஆர் என்ற வாக்காளர்களின் சீர்திருத்தப்ணியில் உள்ள குளறுபடிகளைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

அதனை முன்னிட்டு இன்று விருதுநகர் தேசபந்து மைதானம் முன்பு தமிழக வெற்றி கழகம் சார்பில் விருதுநகர் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ். பி. செல்வம் தலைமையில் ஏராளமானோர் கலந்து கொண்டு தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள வாக்காளர் சீர்திருத்த பணியில் உள்ள குளறுபடிகளைக்கண்டித்தும், மேலும் ஆளும் திமுக கட்சியினரின் தலையீடு அதிகம் உள்ளதால் இளநிலை வாக்காளர்கள் பாதிக்கப்படுவதைக் கண்டித்தும், மேலும் எஸ்.ஐ. ஆர்.ஐ. தேர்தல் ஆணையம் எளிமைப்படுத்த வேண்டும்,இதனை கண்டித்து இன்று தேர்தல் ஆணையம் மற்றும் திமுகவுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

NKBB Technologies

About Admin

Check Also

கரூரில் வ உ சி அவர்களின் 89 வது நினைவு தினத்தையொட்டி தமிழக நீதிக்கட்சி சார்பில் புகழாஞ்சலி

கரூர் அடுத்த தாந்தோன்றிமலை பகுதியில் யூனியன் அலுவலகம் அருகே அமைந்துள்ள செக்கிழுத்த செம்மல் ஐயா வ உ சிதம்பரனார் அவர்களின் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *