Breaking News
Home / இந்தியா / வணக்கம் கரூர் மாவட்டம் கரூர் நகர் உட்கோட்ட காவல் துறை முன் எச்சரிக்கை அறிவிப்பு

வணக்கம் கரூர் மாவட்டம் கரூர் நகர் உட்கோட்ட காவல் துறை முன் எச்சரிக்கை அறிவிப்பு

இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் கரூர் மாவட்டம் புலியூர், அரவக்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இரவு நேரத்தில் நான்கு, ஐந்து நபர்கள் டவுசர் மற்றும் ஜட்டி மட்டும்  போட்டு கொண்டு, மேல் ஆடை ,கீழ் ஆடை போடாமல்  முகத்தை மங்கிகுல்லா போட்டு மறைத்து கொண்டும், கையில் கட்டை மற்றும் கத்திகளை வைத்து கொண்டு வீட்டின் உள்ளே ஆட்கள் இருக்கும் போதே உள்தாழ்பால் போடத வீடு களில் உள்ளே  நுழைந்தும்,கதவை வேகமாக தட்டி திறக்க சொல்லி வீடுகளில் உள்ளே நுழைந்தும், தட்டி திறக்காத கதவுகளை உடைத்தும் வீடுகளில் உள்ளே நுழைந்து பொதுமக்களை மிரட்டியும் ஆயுதங்களால் தாக்கியும் நான்கு வீடுகளில் நகை மற்றும் பணத்தை திருடி சென்று உள்ளனர்.

எனவே நமது பகுதி பொது மக்கள் கீழ்கானும் அறிவுரைகளை பின்பற்றும் படி கரூர் மாவட்டம் கரூர் நகர உட்கோட்ட காவல் துறையின் சார்பாக பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

1) வீட்டிற்கு வெளியே பொதுவெளியில் தூங்க  வேண்டாம்.

2) வீட்டின் உள்ளே படுத்து தூங்கும் போது கதவை உள்தாழிட்டு தூங்கவும்.

3) இயற்கை உபாதை கழிக்க வீட்டிற்கு வெளியே உள்ள கழிவறைக்கு வரும் போது தனியாக வரவேண்டாம்.

4) வீட்டின் உள்ளே தூங்கும்  போது இரவு நேரத்தில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டால் யார் என்று தெரியாமல் கதவை திறக்க வேண்டாம்.

5) வீட்டின் வெளியே சந்தேகத்திற்கு இடமாக நாய் குறைத்தாலோ, வீட்டில் உள்ள வளர்பு பிராணிகள் சத்தம் போடுதல், வீட்டிற்கு வெளியே உள்ள தண்ணீர் குழாயில் தண்ணீர் வரும் சத்தம் கேட்டாலோ, வீட்டின் மின் இணைப்பை துண்டித்தாலோ, வீட்டின் மீது கல் எரிந்தாலோ, விட்டின் வெளியே உள்ள மின் மோட்டர் ஓடும் சத்தம் கேட்டாலோ,மேலும் இது போன்று  நடைமுறைக்கு மாறான ஏதேனும் சம்பவம் நடந்தாலோ அல்லது சந்தேகப்படும்படியான நபர்கள் நடமாட்டம் இருந்தாலோ அண்டை வீட்டார் மற்றும் உறவினர்கள் அல்லது காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் காவல் உதவி ஆப் பதிவிறக்கம் செய்தும் தகவல் தெரிவிக்கலாம்.

தகவல் தெரிவிக்க வேண்டிய எண்கள்:

மாவட்ட காவல் அலுவலகம்
9498100780

மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை
9498181222

மற்றும் அவசர அழைப்பு எண் : 100

NKBB Technologies

About Admin

Check Also

திண்டுக்கல்லில் பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது – பைக் பறிமுதல்

திண்டுக்கல், ரவுண்ட் ரோடு பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது பைக்கை மர்ம நபர் திருடி சென்றது தொடர்பாக நகர் வடக்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *