Breaking News
Home / தமிழகம் / திண்டுக்கல்லில் பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது – பைக் பறிமுதல்

திண்டுக்கல்லில் பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது – பைக் பறிமுதல்

திண்டுக்கல், ரவுண்ட் ரோடு பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது பைக்கை மர்ம நபர் திருடி சென்றது தொடர்பாக நகர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து நகர் DSP.கார்த்திக் உத்தரவின் பேரில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் (பொறுப்பு) தலைமையில் சார்பு ஆய்வாளர் நாராயணன் நகர் குற்றத்தடுப்பு பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ் காவலர்கள் ராதா, முகமதுஅலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட காரைக்குடியை சேர்ந்த நாகார்ஜூன்(19) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து பைக்கை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

NKBB Technologies

About Admin

Check Also

கரூரில் வ உ சி அவர்களின் 89 வது நினைவு தினத்தையொட்டி தமிழக நீதிக்கட்சி சார்பில் புகழாஞ்சலி

கரூர் அடுத்த தாந்தோன்றிமலை பகுதியில் யூனியன் அலுவலகம் அருகே அமைந்துள்ள செக்கிழுத்த செம்மல் ஐயா வ உ சிதம்பரனார் அவர்களின் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *