Breaking News
Home / இந்தியா / இந்தியாவில் செயல்படக்கூடிய கூட்டுறவு துறைகளிலேயே தமிழகத்தில் செயல்படும் கூட்டுறவுத்துறை தான் வளர்ந்து வரக்கூடிய தொழில் நுட்பத்தையும் உள்வாங்கி தேவையான வளர்ச்சியை பெற்று அடுத்தகட்டத்திற்கு சென்று முதலிடத்தை எட்டியுள்ளது-விருதுநகரில் நடைபெற்ற 72 வது அனைத்திய கூட்டுறவு வாரவிழாவில் மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு

இந்தியாவில் செயல்படக்கூடிய கூட்டுறவு துறைகளிலேயே தமிழகத்தில் செயல்படும் கூட்டுறவுத்துறை தான் வளர்ந்து வரக்கூடிய தொழில் நுட்பத்தையும் உள்வாங்கி தேவையான வளர்ச்சியை பெற்று அடுத்தகட்டத்திற்கு சென்று முதலிடத்தை எட்டியுள்ளது-விருதுநகரில் நடைபெற்ற 72 வது அனைத்திய கூட்டுறவு வாரவிழாவில் மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு

விருதுநகரில் 72 வது அனைத்திய கூட்டுறவு வாரவிழா மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில் நடைபெற்றது.இவ்விழாவை மாநில வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன் மற்றும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து கூட்டுறவு வார விழா உறுதிமொழியை ஏற்றனர்.பின்னர் புதியவகை சிறுதானிய உணவுப் பொருட்களை அமைச்சர்கள் அறிமுகம் செய்தனர்.பின்னர் பல்வேறு சிறுவணிக கடன்,மத்தியகால கடன்,மகளிர் சுய உதவிக்கடன் என 21 திட்டங்கள் மூலம் 2 ஆயிரத்து 379 பயனாளிகளுக்கு ரூ.22 கோடியே 50 லட்சம் மதிப்பிலான கடன் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.

விழாவில் பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு,இந்தியாவில் செயல்படக்கூடிய கூட்டுறவு துறைகளிலேயே தமிழகத்தில் செயல்படும் கூட்டுறவுத்துறை தான் வளர்ந்து வரக்கூடிய தொழில் நுட்பத்தையும் உள்வாங்கி தேவையான வளர்ச்சியை பெற்று அடுத்தகட்டத்திற்கு சென்று முதலிடத்தை எட்டியுள்ளது என்றும் பிற மாநிலங்கள் தமிழ்நாட்டை முன் உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியதை சுட்டிக்காட்டிய அவர்,இந்த நிலையை அடைய காரணம் தமிழக முதலமைச்சரும் கூட்டுறவுத்துறை அலுவர்களும் தான் என்றார்.அதே போல் தமிழகத்தில் செயல்படும் ரேசன் கடைகள் பெரிய அளவிலான கட்டமைப்போடு அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி செல்வதாகவும் தெரிவித்தார்.

NKBB Technologies

About Admin

Check Also

கரூரில் வ உ சி அவர்களின் 89 வது நினைவு தினத்தையொட்டி தமிழக நீதிக்கட்சி சார்பில் புகழாஞ்சலி

கரூர் அடுத்த தாந்தோன்றிமலை பகுதியில் யூனியன் அலுவலகம் அருகே அமைந்துள்ள செக்கிழுத்த செம்மல் ஐயா வ உ சிதம்பரனார் அவர்களின் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *