Breaking News
Home / தமிழகம் / பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவர்களை தலைமை ஆசிரியர் தரக்குறைவாக திட்டியதால், நஞ்சப்பா அரசு பள்ளி மாணவர்கள் சாலை மறியல்.

பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவர்களை தலைமை ஆசிரியர் தரக்குறைவாக திட்டியதால், நஞ்சப்பா அரசு பள்ளி மாணவர்கள் சாலை மறியல்.

திருப்பூர் ராயபுரம் பகுதியில் நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை சுமார் 2,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். மிகவும் பழமையான பள்ளி என்பதால் திருப்பூர் மாநகரின் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் பேருந்து மூலம் இங்கு வந்து கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு விரைவில் வரக்கூடிய சூழலில் அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு வகுப்பு நடந்தது. இரவு 7 மணி வரை இந்த சிறப்பு வகுப்புகள் நடைபெற்றதால், மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடிய மாணவர்கள் பேருந்துகள் இன்றி மிகவும் சிரமப்பட்டனர். வீடுகளுக்கு செல்லவே இரவு 8 மணிக்கு மேல் ஆனதாகவும் அதன் காரணமாக இன்று காலை பள்ளிக்கு வருவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே இன்று தாமதமாக பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் பள்ளிக்கு தாமதமாக வந்தது குறித்து கேள்வி எழுப்பியதுடன் தரக்குறைவான வார்த்தைகளில் திட்டியதாக கூறப்படுகிறது இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருப்பூர் ரயில் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து மாணவர்களை டவுன்ஹால் வளாகத்திற்கு அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மாணவர்களின் இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

NKBB Technologies

About Admin

Check Also

திண்டுக்கல்லில் பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது – பைக் பறிமுதல்

திண்டுக்கல், ரவுண்ட் ரோடு பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது பைக்கை மர்ம நபர் திருடி சென்றது தொடர்பாக நகர் வடக்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *